வனிந்து ஹசரங்கவுக்கு அடித்த இன்னுமொரு அதிஸ்டம்…!

தி ஹன்ட்ரட் 2022 இல் விளையாட வனிந்து ஹசரங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல், வனிந்து ஹசரங்க மற்றும் சீன் அபோட் ஆகியோரை த ஹன்ட்ரட் 2022க்கான வெளிநாட்டுத் தேர்வுகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் நிறுவனம் 100,000 இங்கிலாந்து ஸ்டெர்லிங் பவுண்டுக்கு தி ஹன்ட்ரட் டிராப்டில் வாங்கியுள்ளது.

 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் முதன்முறையாக கடந்த ஆண்டு முதல்தடவையாக தொடர் அரங்கேறியது.

இது டி20 கிரிக்கெட்டின் குறுகிய பதிப்பாகும், இதில் ஒவ்வொரு அணியும் தலா 100 பந்துகளை அந்தந்த இன்னிங்ஸில் எதிர்கொள்ள வேண்டும்.

போட்டித்தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.