வனிந்து ஹசரங்கவே ஒரேநாளிலேயே பின்னுக்குத்தள்ளிய பும்ரா..!

பும்ரா வனிந்து ஹசரங்காவை மிஞ்சினார்..!

ஜஸ்பிர்ட் பும்ரா இந்த சீசனில் ஐபிஎல்லில் சிறந்த பந்துவீச்சை நேற்றைய கொல்கத்தா அணியுடனான போட்டியில் பதிவு செய்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஜஸ்பிர்ட் பும்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பும்ராவை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா முறியடித்தார்.

இதேநேரம் இருதினங்களுக்கு (08) முன்னர் SRH அணிக்கெதிராக இலங்கை தேசிய அணி வீரரும் RCB யின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க தனது 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவே இந்த சீசனுக்கான சிறந்த பந்துவீச்சாக திகழ, இப்போது அடுத்தநாளே பும்ரா , ஹசரங்கவை பின்தள்ளி சாதனை படைத்துள்ளார்.

பும்ராவின் பந்துவீச்சு 5/10 (4) ஐபிஎல் வரலாற்றில் 5வது சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.

குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுக்கும்போது குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள் ?

5 ரன்கள்: அனில் கும்ப்ளே
10 ரன்கள்: ஜஸ்பிரித் பும்ரா*
12 ரன்கள்: இஷாந்த் சர்மா
12 ரன்கள்: அல்ஜாரி ஜோசப்

#JaspritBumrah | #KKRvMI | #ஐபிஎல் 2022