வனிந்து ஹசரங்காவின் உலக சாதனையை முறியடித்த சந்தீப் லமிச்சனே ..!

வனிந்து ஹசரங்காவின் உலக சாதனையை முறியடித்த சந்தீப் லமிச்சனே ..!

நேபால் கிரிக்கெட் அணியின் தலைவரும் சுழற்பந்து வீச்சாளரான சந்தீப் லமிச்சனே கென்ய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் ஹசரங்கவினுடைய உலக சாதனையை தகர்த்ததுள்ளார்.

ஆண்டில் அதிகமான T20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை இலங்கையின் ஹசரங்க இதுவரை தன்னகத்தே கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த சாதனையை (36 விக்கெட்டுக்கள்) இப்போது லமிச்சனே முறியடித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கென்யா அணிக்கு இடையேயான கடைசி T20 ஆட்டத்தில் 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓராண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

☑️ சந்தீப் லமிச்சனே (2022) – 18 போட்டிகளில் 38 விக்கெட்டுகள்
☑️ வனிந்து ஹசரங்க (2021) – 20 போட்டிகளில் 36 விக்கெட்டுகள்
☑️ தப்ரைஸ் ஷம்சி (2021) – 22 போட்டிகளில் 36 விக்கெட்டுகள்