“வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் நாங்கள் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளோம்- RCB பயிற்சியாளர் ஶ்ரீதரன் ஶ்ரீராம்…!

“வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் நாங்கள் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளோம்- RCB பயிற்சியாளர் ஶ்ரீதரன் ஶ்ரீராம்…!

RCB சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் சூப்பர் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் சில மாற்றங்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சில போட்டிகளில் விளையாடிய விதத்தில் தனது பந்துவீச்சு பாணியில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்துள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சமூக வலைதள குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

வனிது ஹசரங்காவின் பந்துவீச்சில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்துள்ளதாக ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பந்துவீச்சு நுட்பத்தில் சில மாற்றங்களை செய்து நிலையான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் கையாளும் யுக்திகள் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்தியன் பிரீமியர் லீக் சீசன் தொடங்கிய போது இருந்ததை விட இப்போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தான் அதிக வெற்றி பெற்றுள்ளதாகவும், கடந்த சில போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் அதை பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் ஹசரங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

IPL தொடரில் 13 போட்டிகளில் விளையாடி ஹசரங்க இதுவரை 23 விக்கட்டுக்களை சாய்த்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ கீழே ?