வனிந்து ஹசரங்க ?
Wanindu Hasaranga De Silva ?
_______________________________
இரண்டு போட்டியிலும் ஏமாற்றம் .ஏகப்பட்ட விமர்சனம் அந்தளவு எதிர்பார்க்கப்பட்ட ஒருவன் தான் இவன் . முதல் போட்டியிலேயே இவன் அடுத்த போட்டியில் பெஞ்சில் இருப்பான் என்ற பரவலான பேச்சுக்கு மத்தியிலும் மீள்வான்/மீட்பான் என்ற நம்பிக்கையில் மேலுமொரு வாய்ப்பை ஹசரங்கவுக்கு வழங்கியது ஹோலியின் தலைமைத்துவத்தின் தனித்துவமே .
ஆனாலும் ஹசரங்கவால் ஹோலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலவில்லை . ஒருவேளை மீள்வதற்கு இன்னும் ஓரிரு போட்டிகள் எடுக்கலாம். ஏனென்றால் கடந்த கால சர்வதேச போட்டிகளில் அவன் சோபிக்கதவறினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டவன் என்பதற்கு அதிக போட்டிகள் சாட்சியாக உண்டு. ஆனால் IPL போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்டவை ஆகையால் வாய்ப்புக்கள் குறைவு .
அடுத்த போட்டியில் ஹசரங்க விளையாடினால் கூட மிகுந்த அழுத்தத்தின் மத்தியிலே விளையாட வேண்டிட சூழ்நிலை . ஆகையால் தற்போதைக்கு அவனை பெஞ்சில் அமர்துவது தான் சிறந்தது .
இது பெங்களூருக்கு மட்டுமல்ல எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கும் அவனை தயார்ப்படுத்துவதற்கு நிச்சயம் உதவும்.
ஏற்கனவே கூட ஐபிஎல் பிரவேசம் நிச்சயம் ஹசரங்கவுக்கு உலகக்கிண்ணத்தில் தாக்கம் செலுத்தும் ஆகையால் வேண்டாம் என்று பலரும் கூறியமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது . எது என்னவோ எமது தங்கத்தை மனம் நோகாமல் பெஞ்சில் அமர்த்தி என்றாலும் தொடர் முடிய அனுப்பினலே போதும் .
இந்த IPL ஐ வைத்து அவன் மீதான நம்பிக்கையை சிதறடிக்க நாங்கள் ஒன்றும் மாற்றார் ரசிகர்கள் அல்ல . உண்மையான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் . அவன் எமது நாட்டின் முத்திரை குத்தப்பட்ட வீரன் . அவனை எதிர்கொண்ட சர்வதேச வீரர்களுக்கு மாத்திரம் தெரியும் அவனது மீளெழுச்சி எப்படி என்று .
யார் நம்பினாலும் நம்பாட்டிலும் அவனுக்கான ரசிகர் பட்டாளத்தின் நம்பிக்கை ஏன் ஒட்டுமொத்த இலங்கை ரசிகர்களின் அவன் மீதான நம்பிக்கையை யாராலும் குறைக்க முடியாது. அவனை மனக்காயம் / காயம் எதுவும் இல்லாமல் அனுப்பினாலே போதும் … உலகக்கிண்ணத்தில் சந்திக்கலாம் ??
#sujanth