வயது 20, ஒருநாள் போட்டிகள் -9, சதங்கள் 3, கலக்கும் குர்பாஸ் ?

3rd ODI: குர்பாஸ் சதத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆஃப்கானிஸ்தான்

வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 46.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 86 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் – ரியாஸ் ஹசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதன்பின் 35 ரன்களில் ரியாஸ் ஹசன் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷா 47 ரன்கள்ள் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 40.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 106 ரன்களைச் சேர்த்தார்.

3️⃣ ODI தொடர்
3️⃣ சதங்கள்

127 v அயர்லாந்து
103 வி நெதர்லாந்து
106* v பங்களாதேஷ்

ரஹ்மானுல்லா குர்பாஸ் ?

Abdh