வரலாறு படைக்கும் முயற்சியில் இங்கிலாந்து – விட்டுக்கொடுக்குமா இந்தியா ?

இங்கிலாந்து அணியின் அதிகபட்ச சேசிங் ஓட்டு எண்ணிக்கை என்ன தெரியுமா ?

 இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

இதில் நான்காவது போட்டியில் 2வது இன்னிங்சிற்காக ஆடிவரும் இங்கிலாந்து அணி 368 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

முன்னதாக இந்திய அணியின் 191 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது, இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அபாரமாக 466 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 368 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் அகராதியில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றி பெற்ற சந்தர்ப்பங்கள் இதுவரைக்கும் 4 போட்டிகளாகும்.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 4வது இன்னிங்சில் துரத்தியடித்து வெற்றி பெற்ற ஓட்டு எண்ணிக்கை 362 ஆக காணப்படுகிறது.

லீட்ஸ் மைதானத்தில் 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த சாதனையை இங்கிலாந்து படைத்தது, பென் ஸ்டோக்ஸ் இறுதிவரைக்கும் போராடி அற்புதமான சதத்தை அடித்து அந்த போட்டியில் இங்கிலாந்துக்கான  வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

இந்த நிலையில் இந்திய அணி 368 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், இந்த இலக்கை இங்கிலாந்து அடையுமாக இருந்தால் அவர்களுடைய கிரிக்கெட் அகராதியில் புதிய சரித்திரம் சாதனைக்கு சொந்தக்காரராகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது , நாளை ஐந்தாவதும், இறுதியுமாட நாளில் வெற்றி பெறுவதற்கு 90 ஓவர்களில் 291 ஓட்டங்கள் தேவையாக இருக்கிறது.

இங்கிலாந்தின் சரித்திர சாதனைக்கு இந்திய பந்து வீச்சுப்படை விட்டுக் கொடுக்குமா என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

Previous articleபங்களாதேசை பழிதீர்த்தது நியூசிலாந்து- மூன்றாவது போட்டியில் சுழற்பந்து வீச்சை கொண்டு அபார வெற்றி..!
Next articleபுஜாரா, ரோகித் சர்மாவிற்கு உபாதை- இந்திய கிரிக்கெட் சபை தகவல் ..!