வரலாறு படைத்தது குஜராத் – போராடித் தோற்றது ராஜஸ்தான் ..!

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலின குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

 

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

131 எனும் இலக்குடன் ஆடிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளதுடன் 20 கோடி பரிசையும் தனதாக்கியது.

YouTube link ?