வரலாற்றில் இன்று: ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் புது மகுடம்

வரலாற்றில் இன்று: ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் புது மகுடம்

இன்றைய நாளில் சரியாக 11 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதுவரை நிகழ்த்தப்படாத ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது நாள் வரை அச் சாதனை எட்டாக் கனியாக அல்லது யாரும் முயற்சி செய்ய முடியாத சாதனையாகவே இருந்து வந்தது.

ஆம் 2010 பிப்ரவரி 24 ஆம் திகதி கிரிக்கெடின் கடவுளால் கிரிக்கெடிற்கு ஒரு புதிய சாதனை அறிமுக படுத்தப்பட்டது.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கானல் நீராக இருந்து வந்த இரட்டை சதம் என்ற மைல் கல்லை தன் கையால் நாட்டி இரட்டை சதம் என்ற பதத்தை ஒரு நாள் கிரிக்கெடுக்கு அறிமுக படுத்தினார் சச்சின் டெண்டுல்கர்.

குவாலியூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அப்போது ஒரு நாள் போட்டியில் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை 194.
அந்த ஓட்ட எண்ணிகையை அன்று தான் சச்சின் முறியடிப்பார் என்று யாரும் ஆரம்பத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்திய அணி முதலில் ஆட ஆரம்பித்ததில் இருந்து சச்சின் ஓட்டங்களை விளாசினார். 11.4 ஓவர்களில் அரைச்சதம் கடந்தார். 28 ஆவது ஓவர் நிறைவில் ஒரு நாள் போட்டிகளில் 46 ஆவது சத்தத்தை கடந்தார்.(93 ஆவது சதம் மொத்தமாக) இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் சச்சின் மற்றும் டினேஷ் கார்த்திக் இடையில் 200 ஐ அண்மித்தது. கார்த்திக் ஆட்டமிழந்து யூசுஃப் பதான் சச்சினுடன் இணைந்தார். 37.3 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை கடந்தார் சச்சின். அப்போதும் 200 என்ற கனவு நனவாகும் என விரும்பிய யாரும் அது அன்றைய போட்டியில் நிகழும் என நினைத்திருக்கவில்லை. 41.1 ஆவது ஓவர்இல் யூசுஃப் பதான் ஆட்டமிழந்தார். புதிதாக உள்நுழைந்த வீரர் தோனி. அப்போது சச்சின் 168 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

அதே ஓவரில் 6 4 என அடித்து 200 என்ற இலக்கு சாத்தியம் என ரசிகர்களை நம்பவைத்தார். 43 ஆவது ஓவர் இறுதி பந்தில் 4 ஒட்டங்கள் அடித்து 186 என்ற தனது முந்தைய சாதனையை சச்சின் சமன் செய்தார். 43 ஆவது ஓவர் நிறைவில் சச்சின் 186(134) தோனி 4(5) இந்தியா 322/3. அப்போது தா‌ன் தோனி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 400 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி நகர்ந்தது. களத்தில் நின்ற தோனி சச்சின் தவிர ஒட்டு மொத்த உலகமும் இந்திய அணியின் 400 ஐ விட சச்சினின் 200 ஐ எதிர் பார்த்து காத்திருந்தது. 45.3 ஆவது ஓவரில் 2 ஓட்டங்களை பெற்று சச்சின் 195 என்ற அப்பொதைய அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையை அடைந்தார். 200 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை அடைய 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 4 ஓவர்கள் மீதமிருந்தது. மறுமுனையில் தோனி அதிக பந்துகளை சந்தித்து ஓட்டங்களை விளாசினார்.

47 ஆவது ஓவரில் சச்சின் 2 ஓட்டங்களைப் பெற்றார்.

47 ஓவர் நிறைவில் சச்சின் 198 ஓட்டங்களை அடைந்தார். அடுத்த ஓவரில் சச்சின் ஒரு ஒட்டத்தை பெற்றார். 48 ஓவர் நிறைவில் சச்சின் 199 ஓட்டங்கள்.

49 ஆவது ஓவரை Steyn வீசினார். அந்த ஓவரில் 6 பந்துகளையும் தோனி எதிர் கொண்டு 17 ஓட்டங்களை விளாசினார். அது மட்டுமில்லாமல் இறுதி பந்தில் ஒரு ஓட்டம் பெற்று அடுத்த ஓவரில் முதல் பந்தை அவரே எதிர் கொண்டார்.

49 ஓவர் நிறைவிலும் சச்சின் 199 ஓட்டங்கள். 6 பந்துகள் மீதமுள்ளன சச்சின் ஒரு ஓட்டம் பெற வேண்டும். ஆனால் முதல் பந்தை எதிர்கொள்பவர் தோனி. முதல் பந்தில் தோனி ஒரு ஓட்டம் பெற்று சச்சினுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு அமையும் என கிரிக்கெட் உலகம் எதிர்பார்ப்பில் இருந்ததது. ஓவரின் முதலாவது பந்து வீசப்படுகிறது. தோனி சிக்சர் அடித்து ஆரம்பித்தார். இந்திய வீரர் ஒருவர் அடித்த 6 ஒட்டத்திற்கு இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்யாது போனது இந்த ஒரு சந்தர்ப்பமாகத்தான் இருக்கும்.

அடுத்த பந்தில் தோனி ஒரு ஓட்டம். தற்போது சச்சின் களத்தில். 49 ஆவது ஓவரில் 3 ஆவது பந்து சச்சின் ஒரு ஒட்டத்தை பெறுகின்றார். ஒரு நாள் போட்டிகளில் முதலாவது இரட்டை சதம். அந்த தருணம் சச்சின் தனது துடுப்பை உயர்த்தி காட்டிய அந்த நிலை ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த ஆரவார களிப்பிலும் அடுத்த 3 பந்துகளில் இரண்டு 4 ஓட்டங்களை பெற்று இந்திய அணிக்கு 400 என்ற மைல் கல்லையும் பெற்று கொடுத்தார் தோனி. சச்சின் 200 இந்தியா 400. முழுமையான ஒரு தருணம்.

இன்று Rohit Sharma மூன்று இரட்டை சதம் மற்றும் Sehwag, Guptill, Gayle, Fakar Zaman என பல வீரர்கள் இரட்டை சதம் அடித்திருந்தாலும் அதற்கான விதை சச்சின் போட்டது.