வரலாற்றில் முதல் முறையாக தொடரை இழந்தது இலங்கை அணி…!

வரலாற்றில் முதல் முறையாக தொடரை இழந்தது இலங்கை அணி…!

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 வது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று , ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

பங்களாதேஷ் அணி வரலாற்றில் முதல்முறையாக இலங்கை அணிக்கெதிரான தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்குமான இரு அணிகளுக்குமிடையிலான தொடர் விபரம்.

இலங்கை 3-0 – 2002
இலங்கை 3-0 – 2005
இலங்கை 2-1 – 2006
இலங்கை 3-0 – 2007
இலங்கை 1-1 – 2013
இலங்கை 3-0 – 2014
இலங்கை 1-1 – 2017
இலங்கை 3-0 – 2019
பங்களாதேஷ் 2 -0 -2021 *