பிலிப்பைன்ஸ் வரலாற்றில் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஹிடிலின் டயஸ் வென்றார்.
பிலிப்பைன்சின் நாட்டின் பளுதூக்கும் வீராங்கனை ஹிடிலின் டயஸ் இப்போது சமூக வலைத் தளங்களில் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியிருக்கிறார் .
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பளு தூக்கும் போட்டிகளில் பிலிப்பின்ஸ் நாட்டின் வரலாற்றில் முதலாவது தங்கப்பதக்கத்தை வென்று ஹிடிலின் டயஸ் சாதனை படைத்தவர் .
போட்டிகளுக்காக பயிற்சிகளை மேற்கொண்டபோது அவருடைய உள்ளங்கை எவ்வளவு பழுதடைந்து பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது என்பதை தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டதன் பின்னர் ஹிடிலின் டயஸ் ஊடகங்களுக்கு காண்பித்தார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது .
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் போட்டியாளர்களும் வீர,வீராங்கனைகளும் எவ்வளவு துயரை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவருடைய புகைப்படங்கள் சான்று பகிர்கிறது .
ஏதோ ஒரு சாதனையை நிகழ்த்துவதற்காக நாங்கள் பல சோதனைகளை கடந்து வந்தாலும் இறுதியில் வெற்றி கிட்டும் என்பதற்கு ஹிடிலின் டயஸ் நமக்கெல்லாம் மிகப்பெரிய உதாரணம் எனலாம்.