வலுவான நிலையில் இங்கிலாந்து- திணறும் இந்தியா….!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

இலங்கை அணிக்கெதிரான இலங்கை மண்ணில் வைத்து அற்புதமாக சுழல் பணத்தை வீச்சை எதிர்கொண்ட இங்கிலாந்து, அதனை இந்தியாவுக்கு எதிராகவும் சிறப்பாக பயன்படுத்துகின்றது.

2 சேஷன்கள் இதுவரை நிறைவுக்கு வந்து தேனீர்பான இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 45 ஓட்டங்களுடனும், ஆரம்ப வீரர் சிப்லி 53 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது ஆடி வருகின்றனர்.
3 வது விக்கெட்டில் இதுவரை பிரிக்கப்படாத 77 ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளது.

31 ஓவர்களாக இந்தியா விக்கெட் வீழ்த்த போராடி வருகின்றது, இன்றைய நாள் நிறைவுக்கு வர 33 ஓவர்கள் மிதமிருக்கின்றது.

2.25 PM