வாகன சாரதிகளாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றிவருவது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கை அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும், 2011 உலக கிண்ண அணியில் இடம்பிடித்தவருமான சுராஜ் ரண்டீவ் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

36 வயதான ராண்டிவ் கிளப் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் , அவர் சமீபத்தில் இந்திய சுற்றுலாவில் ஆஸ்திரேலிய அணிக்காக வலைகளில் பந்து வீசினார், இப்போது ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பகுதிநேரமாக கடமையாற்றுகின்றார்.

ராண்டிவ் 12 டெஸ்ட் போட்டிகளிலும் ,31 ஒருநாள் போட்டிகளிலும்,7 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இலங்கையில் பஸ் டிரைவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படவில்லை என்றாலும், இது போன்ற வேலைகள் ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதி நேர வேலையாக ஒரு நல்ல ஊதியத்துடன் நன்கு மதிக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நமது இலங்கையர்களில் பெரும்பாலோர் அங்கு செலவினங்களை ஈடுசெய்ய பகுதிநேர வேலைகளை செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இதுவொன்றும் ஆச்சரியமில்லை எனலாம்.

ஆனால் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரை இவாறு பார்ப்பது சற்று வருத்தமாக இருக்கிறது என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது, அவர் குறுகிய காலத்தில் இலங்கை அணிக்காக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார், இவரோடு சேர்ந்து சிந்தக ஜெயசிங்க எனும் சகலதுறை வீரரும் அங்கே இதே பணியில் இருக்கிறார், 46 வயதான இவர் இலங்கை அணிக்காக 5 T20 போட்டிகளில் விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு உதவத் தேவையான எதைச் செய்தாலும் நாம் எல்லோரும் அதை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

video-