‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வோர்னர் மற்றும் அணியினர்.(video)

நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம் ஆடி இருப்பது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைவர் டேவிட் வார்னர் , தனது குடும்பத்தினருடன் ஏராளமான டிக்டோக் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.

“புட்ட போம்மா” பாடலுக்கு நடனமாடிய வார்னர் மற்றும் அவரது மனைவி கேண்டீஸ் வீடியோ ஒன்று வைரலாகியது முன்னைய கதை.

இந்தநிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு தன குழுவினருடன் வோர்னர் நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.