வாய் இருக்குனு எதாச்சும் பேசாதீங்க.. ரவி சாஸ்திரிக்கு பதிலடி தந்த இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்
இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டுகளை கொத்தாக இழந்து தோல்வியை தழுவுவது முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி, போதிய அளவு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ரவி சாஸ்திரியின் இந்த புகார் இங்கிலாந்து அணி வீரர்களை கோபமடைய செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், ரவி சாஸ்திரி சொன்னது உண்மை கிடையாது. ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி என்பது கொஞ்சம் நீண்ட நெடிய தொடர் தான். நாங்கள் இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் பயணத்து இருந்திருக்கிறோம்.
இந்த தொடரில் வெறும் இரண்டே இரண்டு பயிற்சி முகாமை மட்டும்தான் நாங்கள் ரத்து செய்வோம். தவிர அனைத்து பயிற்சியிலும் பங்கேற்று தொடர் முழுவதும் போட்டிகளுக்கு நாங்கள் தயாரானோம். எங்கள் அணியில் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தும் விதத்தில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக நாங்கள் சோம்பேறிகள் இல்லை. போதிய பயிற்சி எடுக்கவில்லை என்பது போல் ஒரு இமேஜை உருவாக்கி விடாதீர்கள். எங்கள் அணி வீரர்கள் எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும். ஆட்டத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருப்பார்கள். எங்களுடைய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அதிகரிக்க கூடிய முடிவுகளை நாங்கள் பெற முயற்சி செய்வோம்.
ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் இந்தியா போன்ற பலமான அணியை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொண்டு இருக்கின்றோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் பெஞ் மார்க்காக இந்திய அணி தற்சமயம் இருக்கிறது. அதே சமயம் நாங்கள் எங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை என்பது உண்மைதான்.
என் ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கென சில தருணங்கள் நாங்கள் உருவாக்கினோம். ஆனால் எங்களுக்கு தேவையான முடிவுகளை அது தரவில்லை. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம் என நினைக்கும் தருணங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒருங்கிணைந்து விளையாடுவோம். உங்களால் முடியும் என்று எனக்கு தெரியும். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அபாயகரமான அணியாக நாங்கள் நிச்சயம் திகழ்வோம் என ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.