வாஷிங்டன் சுந்தர் அபாரம் தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தாலும் அவரால் சதத்தை பெறமுடியாது போனது.

241 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து Follow on முறைமூலம் இந்தியாவை துடுப்பாட பணிக்காது மீண்டும் துடுப்பாட தயாரானது.

மதியபோசனத்துக்கு ஆட்டம் நிறுத்தப்படும்வரை இங்கிலாந்து அணி 1 விக்கட்டை இழந்து 1 ஓட்டம் பெற்றுள்ளது.