வாஸ்- பதவி விலகினாரா ? விலக்கப்பட்டாரா ?
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சாமிந்த வாஸ் இன்று (பெப்ரவரி 22) தனது திடீர் பதவி அறிவிப்பை வெளியிட்டார்.
2021 மார்ச் 26 முதல் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய முடியாதுள்ளதாகவும் என்று வாஸ் தெரிவித்தார்.
இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் புறப்பட திட்டமிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னதாக வாஸின் ராஜினாமா அறிவித்தல் வெளிவந்துள்ளமை ஆச்சரியத்துக்குரியதாகவே பேசப்படுகின்றது.
சமிந்த வாஸ் பதவி விலகினாரா அல்லது பதவி விலக்கப்பட்டாரா என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவலும் வெளியாகவில்லை.
அதிகரித்த அமெரிக்க டாலருக்கான நியாயப்படுத்த முடியாத கோரிக்கையை ஏற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் மறுத்ததே இதற்கான காரணம் என்றும் பிந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.