2021 IPL போட்டிகளுக்கான ஏலத்தில் பங்குபற்றவுள்ள இறுத 9 வீரர்களுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் Jaffna Stallions சார்பாக LPL போட்டிகளில் விளையாடிய நம்மவர் #வியாஸ்காந் இடம்பெற்று இருக்கின்றார்.
தற்போது யாழில் நடைபெறும் ஞானம்ஸ் பெயின்ற் பிறீமியர் லீக்கில் அரியாலை கில்லாடிகள் 100 அணக்காக விளையாடி வரும், வியாஸ்காந் IPL அணிகளால் வாங்கப்படுகின்றாரோ ?? இல்லையோ ??என்ற கேள்விகளை தாண்டி எதிர்காலத்தில் தொழில் முறைக் கிரிக்கெட்டில் சாதிக்க எவ்வாறான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என இக்கட்டுரை ஆராய்கின்றது.
1.பந்துவீச்சில் சில variations சேர்க்கப்பட வேண்டும்.
2.Control improve பண்ண வேண்டும்
3.களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
4.அவரது பந்துவீச்சு வீடியோக்கள் மூலம் சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதற்கு தரமான #Media_pages அவசியம். Twitter/FB/Instagram உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் official page அமைய வேண்டும்.
5. இலங்கை கழகம் ஒன்றில் நிரந்தரமாக விளையாட வேண்டும். அடுத்த LPL இல் நிரந்தர வீரராக மாற வேண்டும்.
6.#Bangladesh Premier League மற்றும் #Carrebian Premier League தொடர்களில் ஏலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை சான்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
6. #தமிழ்நாடு_பிறீமியர்_லீக்கிலும் விளையாட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நம்மவர்கள் TNPL அணியொன்றுடன் பேசி உடன்பாட்டுக்கு வரலாம்.
7. PSL, Bigbash, Super Smash போன்றவற்றையும் இலக்காக கொண்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.