விடைபெற்றார் சங்கா- வரலாற்றில் முதல் பெண்ணாக சாதனை படைக்கும் கிளேர் கோனர்…!
இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட்டில் ஆஷஸ் வென்ற முன்னாள் கேப்டன் கிளேர் கோனர்,பழம்பெரும் MCC கிரிக்கெட் கிளப்பின் 234 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் தலைவராக லார்ட்ஸில் பதவியேற்றார்.
ECB யில் மகளிர் கிரிக்கெட் இயக்குநராகவும் உள்ள கோனார், 2020 ம் ஆண்டில் கிளப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் கோவிட் -19 காரணமாக அவரது பதவி ஒரு வருடம் தாமதமானது, அதன்காரணத்தால் குமார் சங்கக்கார குறித்த பதவியில் தொடர்ந்தார்.
“எம்சிசி தலைவராக இருப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்,” என் வாழ்நாள் முழுவதும் நேசித்த விளையாட்டின் நலனுக்காக, இந்த மகத்தான முக்கிய பங்கை வழங்குவதற்கு என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என குமார் சங்கக்காரா நன்றி பாராட்டினார் .
“அடுத்த 12 மாதங்களில் கிளப்பின் தலைமை மற்றும் குழுக்களுடன் ஆதரவளிக்கவும், பணியாற்றவும் எனது அனுபவ வரம்பை கொண்டு வர முயற்சிப்பேன். MCC அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என புதிய தலைவர் கிளேர் கோனர் தெரிவித்தார்.
கானர் தனது 19 வது வயதில் 1995 இல் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானார், மேலும் 2000 ஆம் ஆண்டில் கேப்டன் பொறுப்பை ஏற்றார், ஒரு வருடம் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லார்ட்ஸில் இங்கிலாந்தை வழிநடத்தினார். இடது கை சுழற்பந்து வீச்சில் ஆல்-ரவுண்டரான கானர், இங்கிலாந்து அணிக்கு 42 ஆண்டுகளில் முதல் ஆஷஸ் வெற்றிக்காக வழிநடத்தி, 2005 ல் 1-0 தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்தின் கேப்டனாக ஆறு வருடங்கள் நீடித்ததன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
புதிய தலைவரது வழிநடத்தலில் MCC சிறப்பாக இயங்க நாமும் வாழ்த்துவோம்.