வித்தியாசமான கிரிக்கெட் உலகிற்கு செல்ல தயாராகுங்கள் : போல்டின் திடீர் முடிவு..!

வித்தியாசமான கிரிக்கெட் உலகிற்கு செல்ல தயாராகுங்கள் : போல்டின் திடீர் முடிவு..!

போல்ட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான வேகத்தடை வயது 33க்குள் சென்று விட்டார். இனி இவரது உடல் நிச்சயமாக மூன்று ஃபார்மட் கிரிக்கெட் ஆட ஒத்துழைக்காது. இதைக் கருத்தில் கொண்டும், முடிந்த வரை டி20 லீக்குகள் ஆட தன்னை நல்ல உடற்தகுதியுடன் வைப்பதற்காகவும் சர்வதேச கிரிக்கெட்டை சற்றுக் குறைக்க போல்ட் திட்டமிட்டுள்ளார்.

இது ஒன்றும் கிரிக்கெட்டுக்கு புதியதல்ல. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னரே பொல்லார்ட் இதைச் செய்தார். ஆனால் அப்போது இருந்த franchise cricket-ன் நிலையும் தற்போது இருக்கும் நிலையும் வேறு. டி20 லீக்குகளின் அபரிதமான வளர்ச்சி நிச்சயம் பெரிய வருமானம் ஈட்டாத சர்வதேச நாடுகளின் போட்டிகளை பாதிக்கும் என்பதால் போல்ட் எடுத்தது மிக மிக சரியான முடிவு தான்.

 

பலர் நினைப்பது போல சர்வதேச கிரிக்கெட் இது போன்ற செயல்களால் முற்றிலும் அழிந்து விடாது. டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, டெஸ்ட் ஆட்டங்களுடன் bilateral போட்டிகளும் நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் இவை நடக்கும் போது கூடவே ஒரு பெரிய டி20 லீக் நடந்தால் வீரர்கள் எதைத் தேர்வு செய்வார்கள் என்பதில் தான் சிக்கல். இன்னமும் 20 ஆண்டுகளுக்குள் டி20 லீக்குகள் தான் காலண்டரில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் என்பது கண்கூடு.

Franchise கிரிக்கெட் BCCI என்னும் monopoly சிஸ்டத்திற்குள் நுழையத் தொடங்கி விட்டது. கொல்கத்தா அணியின் உரிமையாளர் மட்டுமே IPL, cpl, USA league, UAE league என நான்கு அணிகளை வைத்துள்ளார். விரைவில் BBL, Hundred போன்ற லீக்குகளின் அணிகளையும் IPL உரிமையாளர்களே வாங்குவர். அப்படி நடக்கும் போது அவர்களின் அனுமதி பெற்று தான் வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆட வேண்டும் என்ற நிலை கூட வரலாம்.

இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து சில நாட்கள் முன்பு Telegraph பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதின் சாராம்சம் பின்வருமாறு:

“வரும் காலங்களில் franchise அணிகள் ஒரு வீரரை மொத்தமாக இத்தனை ஆண்டுக்கு என contract எடுத்து விடுவர். இப்போது மாதிரி ஆண்டுக்கு இரண்டு மாதம் என்று இல்லாமல் ஆண்டு முழுமைக்கும் எடுப்பர். அவர்கள் சர்வதேச போட்டிகளில் ஆட வேண்டும் என்றால் கூட franchise நிர்வாகத்திடம் NOC வாங்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இனி மெக்கலம் குறித்து எழுதும் போது அவர் முன்னாள் நியூசிலாந்து வீரர் என்று எழுதப்படாமல் முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் என்றே எழுதப்படுவார்”.

?Wilson Hbk