விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஒரு ஓட்டத்தால் சாதனை ஒன்றை தவறவிட்டிருக்கும் கோலி- விமர்சிப்பவர்கள் கட்டாயம் படியுங்கள்..!

விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஒரு ஓட்டத்தால் சாதனை ஒன்றை தவறவிட்டிருக்கும் கோலி- விமர்சிப்பவர்கள் கட்டாயம் படியுங்கள்..!

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்றுவருகின்றது.

இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் மீதமாக இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் காத்திருக்கின்றன.

இந்த தொடர் முழுவதும் விராட் கோலி மிகப்பெரிய அளவில் ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறி வருவதோடு, விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

 

கோலியின் சரித்திரம் முடிந்தது, அவருடைய சகாப்தம் நிறைவு பெற்றது என்று பல விமர்சனங்கள் எழுந்தாலும் கோலி இன்னும் கிரிக்கெட்டை ஆட்சிபுரியும் மிகப்பெரிய பிதாமகன் என்பதை வரலாற்று புள்ளி விபரங்கள் சான்று பகர்கின்றன

நேற்றைய போட்டியில் ஒரு ஓட்டத்தை பெற்றிருந்தால் சர்வதேச கிரிக்கட்டில் டெஸ்ட் ,ஒருநாள், டி20 என்று அனைத்து வகையான ஆட்டங்களிலும் 23,000 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார்.

 

இந்த பட்டியலில் 34,357 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், குமார் சங்கக்காரா 2வது இடத்திலும் (28,016) இருக்கின்றனர்.

இந்தியா சார்பில் இந்தப் பட்டியலில் சச்சின், டிராவிட் ஆகிய இந்தியர்களை அடுத்து 23,000 சர்வதேச ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை கோலி படைக்கவுள்ளார்.

பொன்டிங்-27,483 ஓட்டங்கள்

மஹேல ஜெயவர்தன- 25,957 ஓட்டங்கள்

கலிஸ்-25,534 ஓட்டங்கள்

டிராவிட் – 24,208 ஓட்டங்கள்

இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும், இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடும் கோலியின் ஒட்டுமொத்தமான கிரிக்கெட் வாழ்வில் சராசரி 55.28 ஆக இருக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டியதே. வேறு எவரும் கோலியை நெருங்கும் நிலையிலும் இல்லை.

கோலி கொஞ்சம் தடுமாறுகிறார் என்பது உண்மைதான், ஆனால் விரைவாக மீண்டு வருவார் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

4 வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆரம்பிக்கவுள்ளது.

இந்தப் பட்டியலில் எத்தனை வீரர்கள் 50 க்கு மேற்பட்ட சராசரியை கொண்டிருக்கிறார்கள் என்று தேடிப் பாருங்கள் ,கோலி யாரென்று புரியும் ?????