விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகுடம் சூடினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் …!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகுடம் சூடினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் …!

டென்னிஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் போட்டி தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் சற்றுமுன் நிறைவுக்கு வந்துள்ளது.

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்  செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலியின் மட்டியோ பெரட்டினி வீரர்களுக்கு இடையில் இடம்பெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக அபாரமான முறையில் 6-7, 6-4 ,6-4 ,6-3 என்ற அடிப்படையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் வெற்றி மகுடம் சூடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் டென்னிஸ் உலகில் இவருடைய 20 கிராாண்ட்ஸ்லாமாக இந்த மகுடம் அமைந்ததோடு, ஆறாவது விம்பிள்டன் மகுடமாக அமைந்தது.

இது மாத்திரமல்லாமல் விம்பிள்டன் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ள ஞாபகப்படுத்தக்கூடிய விடயமாகும்.

டென்னிஸ் உலகில் இப்போது நிலையில் மிகப் பெருமளவில் சாதித்திருக்கின்ற சக போட்டியாளர்களான சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் ஆகியோருக்கு அடுத்து இப்போது 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் .இந்த மூவரும் தலா 20  கிராண்ட்ஸ்லாம் வெற்றிகொண்டு உள்ளமையும் இங்கே குறிப்பிடக்கூடிய விடயமாக இருக்கிறது.

இது மாத்திரமல்லாமல் 2021 ஆம் ஆண்டு ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தனதாக்கி இருக்கிறார் .

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ,பிரஞ்சு பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் என்று இப்போது தொடர்ந்து மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன் இந்த ஆண்டின் நான்காவது கிராண்ட்ஸ்லாம் மகுடமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வென்று புதிய உலக சாதனையை நிலை நாட்டுவாரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Australian Open
2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021

French Open
2016, 2021

Wimbledon
2011, 2014, 2015, 2018, 2019, 2021

US Open
2011, 2015, 2018