விம்பிள்டன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஸ்லி பார்டி …!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சாம்பியன் மகுடத்தை சூடிய அவுஸ்திரேலியாவின் மகளிர் வீராங்கனையான 25 வயதான பார்ட்டி ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவிற்கு மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் விம்பிள்டன் பட்டம் வென்று கொடுத்த பெருமையும் ஆஸ்லி பார்டி க்கு கிடைத்தது.
செக் குடியரசின் வீராங்கனை கரோலினாவை 6-3,6-7,6-3 எனும் அடிப்படையில் இலகுவாக வெற்றி கொண்டு இந்த சாம்பியன் மகுடத்தை சூடியனார்.
ஆஸ்லி பார்டி வெற்றி கொள்ளும் 2 வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக இந்த மகுடம் காணப்படுகின்றது.
இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் மகுடத்தை சூடியதும் சுட்டிக் காட்டக்கூடிய விஷயமாகும்.
ஆஸ்லி பார்ட்டி அவருடைய ஆரம்ப காலங்களிலே கிரிக்கெட் வீராங்கனைகள் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் இங்கே சுவாரஸ்யத்துக்குரிய தகவலாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரிக்கெட் தொடரான பிக்பாஸ் லீக் டி20 போட்டிகளில் Brisbane Heat அணிக்காக இவர் விளையாடியதும் கவனிக்கத்தக்கது.
முன்னைய காலத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து பின்னர் 25வது வயதில் இங்கிலாந்்தின் விம்பிள்டன் மகுடத்தை சூடிக்கொண்டு இருக்கின்றமை பெருமைக்குரிய விஷயமே.
இவர் ஒரு சிங்கப் பெண்தான் ?