வியாஸ்காந்துக்கு வாய்ப்பு- மற்றொரு கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்..!
இலங்கையின் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கிரிக்கட் போட்டி தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது ஒரு நாள் போட்டிகள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் என இரு பகுதிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நஷனல் சூப்பர் லீக் (National Super leaque) தொடருக்கான ஒருநாள் தொடர் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இதில் 26 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 100 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 5 அணிகளில் இந்த வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் , மாகாண அணிகளுக்கிடையிலான தொடராக இடம்பெற்ற தொடரே இனிவரும் நாட்களில் இவ்வாறு இடம்பெறவுள்ளது.
கொழும்பு, காலி, தம்புள்ளை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகள் தம்புள்ளை, பல்லேகல, சரவணமுத்து மற்றும் எஸ்.எஸ்.சி மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தேசிய அணிக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கும் இந்த போட்டி பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகின்றது, இதிலே LPL போட்டிகளில் விளையாடிய யாழ் மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் யாழ்ப்பாண அணியில் மேலதிக வீரராக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை மற்றும் அணி விவரங்கள் கீழே.