விராட் கோலியின் அணியிலிருந்து இருவர் திடீர் விலகல் …!

ஐபிஎல் தொடர் இந்தியாவில் இடம்பெற்றுவரும் நிலையில் சில வீரர்கள் திடீர் விலகலை மேற்கொள்வது ஐபிஎல் நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா அச்சத்தில் வீர்ர்களது திடீர் விலகல் போட்டிகளுக்கு பெருத்த சிக்கலை உருவாக்கியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் விளையாடி வந்த இரண்டு அவுஸ்ரேலிய வீரர்களான ரிச்சர்ட்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அடம் ஸம்பா  ஆகியோர் இப்போது தாயகம் திரும்புவதாக அறிவித்துள்ளனர். பெங்களூர் அணி நிர்வாகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Previous articleதலையிடிக்கு மேல் தலையிடி சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் குமார் சங்கக்கார..!
Next articleநடராஜனுக்கு சத்திரசிகிச்சை…!