விராட் கோலியின் அறிவுறுத்தலை கையிலெடுத்த பிரான்ஸ் கால்பந்து வீரர் ,அடிதடியில் முடிந்த கால்பந்து போட்டி ,பிரான்சில் சம்பவம்..!

பிரான்சில் இடம்பெற்ற மார்சேய் மற்றும் OGC நைஸ் கால்பந்து அணிகளுக்கு இடையேயான பிரெஞ்சு லீக் 1 கால்பந்து போட்டி குழப்பத்தில் முடிந்துள்ளது.

மைதனத்தில் இருந்த ரசிகர்கள் டிமிட்ரி பேயட் எனும் வீரருக்கு தண்ணீர் போத்தலால் எறிந்தனர் , அதனை எடுத்து அவரும் திருப்பி ரசிகர் கூட்டத்தில் எறிந்தார் இதுவே குழப்பத்தின் காரணமாகும்.

வீடியோவை பாருங்கள் ???

இதன் பின்னர் சிகர்கள் விளம்பர பலகையை உதைத்துவிட்டு குதித்து அலையன்ஸ் ரிவியராவில் மைதானத்துக்குள் புகுந்தனர்.

இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் தலையிட முன்வந்தனர், ரசிகர்கள் சிலர் வீரர்களை மூர்கத்தனமாக தாக்கினர் , பிரெஞ்சு வானொலி செய்திகளின்படி மூன்று மார்சேய் வீரர்கள் காயமடைந்ததாகவும் அறிவித்திருக்கிறது.

” நடுவர் எங்களுடன் இருந்தார், எங்களிடம், பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். போட்டியை கைவிடுவது அவரது முடிவு, ஆனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டியை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர். இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது, அத்தோடு பிரெஞ்சு கால்பந்துக்கு நாம் முன்னுதாரணங்களை வழங்க வேண்டும எனவும் லாங்கோரியா எனும் மார்சேய் கால்பந்து அணியின் வீீீரர் தெரிவித்தார்.

வீரர்கள் ரகளையில் ஈடுபட்ட 76வது நிமிடம்வரை போட்டி 1-0 என முன்னிலையில் இருந்து OGC நைஸ் அணி,  எதிரணியான  மார்சேய் வீரர்கள் மீண்டும் போட்டியில் ஆட விருப்பத்தை வெளியிடாத காரணத்தால் லீக் 1 கால்பந்து விதிமுறைகளின் அடிப்படையில் 3-0 என OGC நைஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த வாரம் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இங்கிலாந்து ரசிகர்கள் இதே மாதிரி தண்ணீர் போத்தல்கள் கொண்டு லோகேஷ் ராகுலை தாக்கினர்.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி மீண்டும் அதே தண்ணீர் போத்தல்களை கொண்டு ரசிகர்களுக்கு வீசி எறியும்படி விராட் கோலி, லோகேஷ் ராகுலுக்கு சைகை காண்பித்தார்.

இந்த விரும்பத்தகாத நிகழ்வைத் தொடர்ந்து, பிரான்ஸில் இடம்பெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் தன்னை தண்ணீர் போத்தல்களால் தாக்கிய ரசிகரை, களத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீீரர் ஆத்திரமடைந்து அதே தண்ணீர் போத்தல்கள் கொண்டு தாக்கியதால் போட்டி ரகளையில் முடிந்திருக்கின்ற சம்பவம் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வாக முடிந்திருக்கிறது.

விளையாட்டை விரும்பும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது.