விராட் கோலியின் இன்னுமொரு உலக சாதனையை முறியடித்த பாபர் அசாம்..!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான T20 போட்டி தொடர் இடம் பெற்று வருகின்றது.
முதலாவது போட்டி மழையால் கழுவப்பட்டது, இரண்டாவது போட்டி நேற்று நிறைவுக்கு வந்த நிலையில் விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் ஆகியோரால் ஷஹீன் ஷா அஃப்ரிடி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவினர்.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் ஏராளமான சாதனைகளை படைத்தது.
மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆண்டிலேயே அதிகமான ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற உலக சாதனையை ரிஸ்வான் தனதாக்கினார் .
அதுமட்டுமல்லாமல் ஹாபீஸ் மிகச் சிக்கனமாக பந்து வீசிய பந்து வீச்சை பெறுதிக்கான உலக சாதனையை சமன் செய்தார்.
இதேநேரம் நேற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் ஒரு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
ஏற்கனவே கோலியுடைய சாதனைகள் ஒவ்வொன்றாக முறியடித்துவரும் பாபர் அசாம், நேற்றும் கோலியின் சாதனையை முறியடித்தார்.
வேகமாக ட்வென்டி ட்வென்டி கிரிகெட் 20 20 அரைச்சதஙரகளை பெற்றுக் கொண்டவர் என்றும் சாதனை பாபர் அசாம் வசமானது.
நேற்று அவர் 56 ஆவது இன்னிங்சில் 20வது அரைச்சதத்தை பெற்றுக் கொண்டார், விராட் கோலி 65 இன்னிங்சில் 20 அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டமையே உலக சாதனையாக இருந்தது. இதனை பாபர் அசாம் முறியடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் ரோகித் சர்மா 99 வது இன்னிங்சில் 20 அரைசதங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் கோலியின் ஒவ்வொரு சாதனைகளாக பாபர் அசாம் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.