விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் -ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் – பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மொஹாலியில் கரோனா எண்ணிக்கை தினசரி பாதிப்பு 20, 30 என்ற வகையில் உள்ளது.

இதன் காரணமாக மொஹாலி டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் இந்த செயல் விராட் கோலிக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டிய ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், 100ஆவது டெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான தருணம். இதற்கு ரசிகர்களை அனுமதித்து, அதனை பெரிதளவில் கொண்டாட வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், இலங்கை தொடருக்கு போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை.

இந்நிலையில், மைதானத்தில் பார்வையாளர்களும் இல்லை என்றால் போட்டி நன்றாக இருக்காது. விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் என்று விளம்பர படுத்த ரசிகர்கள் மைதானத்தில் முக்கியம் என்று ஸ்டார் நிறுவனம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனை பரிசீலினை செய்த பிசிசிஐ,. 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. கிளப், ஸ்பான்சர்களுக்கு மட்டும் குறைந்தளவில் டிக்கெட் வழங்கப்படலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. எது எப்படியோ, வரலாற்று முக்கிய வாய்ந்த டெஸ்ட்க்கு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு ள்ளதன் மூலம் பிசிசிஐ தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.

Abdh