விராட் கோலியை மட்டமாக பேசிய ஒல்லி ரோபின்சன் -கோலி பதிலடி கொடுப்பாரா ?

விராட் கோலியை மட்டமாக பேசிய ஒல்லி ரோபின்சன் -கோலி பதிலடி கொடுப்பாரா ?

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் விராட் கோலி அண்மைய நாட்களாக மிகப்பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

51 இன்னிங்ஸ்களாக சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விராட் கோலி சதம் எதனையும் பெற்றுக் கொள்ளாததே அதன் பிரதானமான காரணமாக இருக்கிறது .

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில் சின்னப்பிள்ளைக்கும் தெரிந்த ஒரு தவறை விராட் கோலி தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம் பில் பந்தை வீழ்த்தினால் விராட் கோலி அதற்கு இரையாவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையாக இருக்கிறது .

விராட் கோலியை இந்த தொடரில் இரண்டாவது தடவையாக ஆட்டமிழக்கச் செய்தபின் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன்,  இந்திய அணித்தலைவர் விராட் கோலியை மட்டமாக பேசியுள்ளார்.

குறிப்பாக கோலிக்கு மிகப்பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை, சிம்பிளான திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம் , விராட்கோலிக்கு 4வது அல்லது 5வது ஸ்டம்பில் பந்துவீசினால் விராட் கோலி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து செல்வார் என்பதை எங்களுக்கு நன்றாக தெரியும்.

 

அந்த திட்டத்தையே நாங்கள் அமல்படுத்தி விராட் கோலியை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து வருகிறோம் என சொல்லி ரோபின்சன் கோலியை பற்றி மட்டமாக பேசியுள்ளார்.

“It’s a simple plan to Virat, fourth and fifth stump, get it to angle away, and hope he nicks it and he did.” -Ollie Robinson

வாத்தியாரே உன் ஈகோ எல்லாம் தூக்கிபோட்டு வா , இல்லாட்டி நேத்து வந்த பய எல்லாம் இப்படி தான் பேசுவானுக , என்ற கருத்துக்களும் அதிகம் சமூக வலைத்தளங்களில் காணக்கிடக்கின்றன.

உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணி ஆட்டக்காரராக திகழும் கோலி 70 சதங்களை இதுவரைக்கும் விளாசியுள்ளார், இப்படிப்பட்ட கோலியின் இந்த மிகப்பெரிய குறைபாட்டை நிவர்த்தி செய்துகொண்டு மீதமான 2 டெஸ்ட் போட்டிகளிலும் எவ்வாறு மீண்டு வரப்போகிறார் என்பதில்தான் கோலியின் வெற்றி தங்கியிருக்கிறது.

Video ????