விராட் கோலி – அனைவருக்கும் படிப்பினையான உத்வேகம் ❤️ Inspirational story ?

Virat Kohli – A True Inspiration to all ❤️

விராட் கோஹ்லியின் நேற்றைய சதத்தைப் பற்றிப் பேசமுன் வரலாற்றில் சற்றுப் பின்னர் இருந்த ஆரம்பித்தால் தான் முழுமையான ஒரு விஷயம் புலப்படும்.

இந்திய அணி என்பது காலங்காலமாக ஒரு பலம்பொருந்திய அணியாகவே தன்னை நிரூபித்திருக்கிறது. ஆனாலும் பிறநாட்டு ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பும் இருந்திருக்கிறது. அதற்கு இந்திய வீரர்களின் aggressive + emotional behaviorகளும் ஒரு காரணமாக இருந்துள்ளன. இருப்பினும் இந்திய அணி பலம்பொருந்திய அணியாக இருந்தவரை இந்த விமர்சனங்கள் அவ்வளவாகத் தாக்கம் செலுத்தவில்லை.

ஆனால் இதுவே 2007இல் இந்திய அணி, உலகக்கிண்ணத் தொடரில் மோசமாகத் தோற்றபோது அந்த அணி மீதான கடுமையான விமர்சனங்களைத் தோற்றுவித்தது. இந்திய அணி கிட்டத்தட்ட தன்னை முழுமையாக மாற்றிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது. வீரர்கள் முதற்கொண்டு Attitude வரை மாற்றம் பெற்ற அணியாக 2007இலிருந்து படிப்படியாக மாற்றமடைந்து முன்னேற ஆரம்பித்தது.

இப்படியான காலத்தில் தான் கோஹ்லியின் வருகை இடம்பெறுகிறது. தோனி தலைமையில் performance அடிப்படையிலும், attitude அடிப்படையிலும் நற்பெயரைச் சம்பாதித்துக்கொண்டு தன் பயணத்தை மீள ஆரம்பித்த இந்திய அணியில் கோஹ்லியின் வருகை மறுபடியும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சில மாறுபட்ட கருத்துக்களை உருவாக்குகின்றது. அசாத்தியமான விளையாட்டைத் தாண்டி கோஹ்லியின் aggressive attitude, மறுபடியும் இந்தியா பின்னோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பத் தவறவில்லை. ஒருபுறம் அதிரடியான Batting, மறுபுறம் அளவுகடந்த ஆக்ரோஷம் என கோஹ்லியின் ஆரம்பம் பல்வேறுபட்ட கருத்துக்களை உருவாக்கியிருந்தது. கவனித்துப் பார்த்தால், தோனியை வெறுக்காத இலங்கை ரசிகர்களைக்கூடக் காணமுடியும். ஆனால் தன் வாழ்நாளில் குறிப்பிட்ட காலப்பகுதியிலேனும் கோஹ்லியை வெறுக்காத ஒரு இலங்கை ரசிகன் கூட இருக்க மாட்டான்.

ஆனால் காலம் தான் எவ்வளவு அற்புதமானது? சிலகாலம் போனபிற்பாடு கோஹ்லி மீது பலருக்கும் இருந்த பார்வை மாறியது. கிரவுண்டுக்குள்ளேயும், கிரவுண்டுக்கு வெளியேயும் கோஹ்லி வெளிப்படுத்திய attitudeகள் ஒன்றுக்கொன்று பாரிய அளவில் முரணானவை. ரசிகர்களை நடத்தும் விதத்திலும் சரி; தாம் தோற்கும் மட்சிலும் கூட நன்கு perform பண்ணும் பிறநாட்டு வீரர்களுடன் நடந்துகொள்வதிலும் சரி கோஹ்லி ஒரு பக்கா Sportsman. கோஹ்லி என்னதான் இந்திய வீரராக இருந்தாலும், எந்த இடத்திலும், ஸ்பீச்களிலும் இந்தியா என்ற வட்டத்துக்குள் தன்னைக் குறுக்கி, மற்றவர்களை சீண்டுவது கிடையாது. ஒரு விளையாட்டை நேசிக்கும் ஒரு Professionalஆக மட்டும் தான் கோஹ்லி தென்பட்டார். அந்த aggressiveness எல்லாமே விளையாட்டு மீதான மோகமே தவிர தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்பதை உணரக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டது.

Captaincy என்றளவில் தோனி அளவுக்கு கோஹ்லியை ஒப்பிடமுடியாது. காரணம் தோனியின் Captaincyயின் வெற்றி என்பது ஒரு அதிசயம். அது எல்லாருக்கும் கைகொடுக்காது. அவருக்கு மட்டுமே workout ஆன விடயம். ஆனால் கோஹ்லி ஒரு Learner. வெற்றிக்காக விடாமல் போராடும் ஒருவனாகவே நிறையத் தடவை நிரூபித்திருக்கிறார்.

இலங்கை அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரிடம் சொல்லியதுண்டு. “நமக்கு கோஹ்லி மாதிரிப் ப்ளேயர்ஸ் வேண்டும் என்றில்லை . ஆனால் அவரைப் போல டெடிகேஷன் இருந்தாலே போதும் என்று. தனக்கு மாமிச உணவு பிடிக்கும் என்றபோதிலும் தனது performanceஐ அதிகப்படுத்துவதற்காக சைவ உணவுக்கு மாறியதாகக் குறிப்பிட்டியுக்கிறார். அது சரியா பிழையா தெரியாது. ஆனால் அதற்குப்பின் இருக்கும் Dedication and sacrifice தான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

சமீபத்தில் கூட தனது பலவீனமான காலப்பகுதி பற்றி open ஆக ஒரு அறிக்கை விட்டிருந்தார். உண்மையில் அது நம் எல்லோருக்கும் பொதுவான விடயம். ஆனால் அதைப் பொதுவில் வெளிப்படையாகத் தெரிவிக்கும் துணிச்சல் தான் கோஹ்லியை இந்தியா, கிரிக்கெட் என்பவற்றை எல்லாம் தாண்டி, தனது Down period இலிருந்து சாதித்து மீளெழத்துடிக்கும் அனைவருக்குமான ஒரு இன்ஸ்பிரேஷனாக மாற்றியிருக்கிறது.

அவனுடைய நேற்றைய செஞ்சரி நம் ஒவ்வொருவரதும் வெற்றி. அதை இலங்கைக்கு எதிராகப் பெற்றிருந்தாலும் இதே பூரிப்பு இருந்திருக்கும். காரணம் it’s not about a country or a sport. It’s about a fighter, King Kohli ❤️?

Virat Kohli

✍️ கிருத்திகன் மதிரூபன்