விராட் கோலி தலைமையிலான RCB அணியில் ஒரு புதுமுக அதிரடி நட்சத்திரம் ..!

விராட் கோலி தலைமையிலான RCB அணியில் ஒரு புதுமுக அதிரடி நட்சத்திரம் ..!

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் பிலிப் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் .

இதன் காரணத்தால் இவருக்கு பதிலாக நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் பின் அலன் எனும் இருபத்தொரு வயதான ஆட்டக்காரர் அணியில் இடம்பிடித்துள்ளார் .

வெறுமனே 13 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பின் அலன் 506 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் , 6 அரைச் சதங்கள் அடங்கலாக 25 சிக்சர்களையும் விளாசியுள்ளார் .

இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 193 என்று இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது .

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு ஒரு புதுமுக அதிரடி வீரர் கிடைத்திருக்கிறார்.