விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு- ஷிகர் தவான் தலைமையில் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி..!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு- ஷிகர் தவான் தலைமையில் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது,

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது அணியை வழிநடத்திய ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவானின் தலைமையின் கீழ், இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒயிட்வாஷ் செய்து மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான இந்திய அணி விபரம் வெளியாகியுள்ளது.

தீபக் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். சாஹரின் கடைசி ஒருநாள் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானது.

அணி விபரம் ?

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (WK), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.