விராட் கோஹ்லியின் RCB அணியில் இணையும் ஹசரங்க- பேச்சுக்கள் முன்னெடுப்பு..!
IPL போட்டிகளின் இரண்டாம் அத்தியாயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக பல வெளிநாட்டு வீரர்கள் இந்த பருவத்தின் எஞ்சிய போட்டிகளை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.= கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை என்பன டி20 உலகக் கிண்ணம் மற்றும் அதன் பிறகு Ashes தொடர் ஆகியவற்றுக்காக வீரர்களை பாதுகாக்க விரும்புவதால் தங்கள் வீரர்கள் IPL போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வாய்ப்பில்லை என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது..
செப்டம்பர் 19 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் சீசனுக்கு முன்னால், வீரர்கள் இடைவெளிகளை நிரப்ப நிர்வாகம் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தற்போதைய சூழ்நிலையில் மாற்று வீரர்களை தேடும் பணியில் செயல்படும் முதல் உரிமையாளராக மாறியுள்ளது.
RCB யின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா ஐபிஎல் 2021-ல் இருந்து கோவிட் -19 தொற்று அபாயத்தை காரணம் காட்டி வெளியேறிய வீரர்களில் ஒருவர். விராட் கோலியின் தரப்பு இந்த சீசனில் Play off க்கு தகுதி பெற வலுவான நிலையில் இருப்பதால், அவர்கள் குறைப்பாடுகளை நிவர்திக்காமல் சீசனின் இரண்டாம் பாதியில் செல்ல விரும்ப மாட்டார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஜாம்பாவுக்கு மாற்றாக அவர்கள் இலங்கையின் சகலதுறை வீரர் ஹசரங்கவை இணைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்கு ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக 24 வயதான ஹஸறங்கவை பரிசீலிக்க கோஹ்லி தலைமையிலான RCB அணி BCCI யை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க சமீபத்திய காலங்களில் மிகவும் உற்றுநோக்கும் டி20 வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, லெக் ஸ்பின்னர் 4.32 ஓட்ட பெறுதியில் (Economy) 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வித்தையை காட்டியாமை முக்கிய விடயமாகும்.
AB De வில்லியர்ஸ், க்ளென் மக்ஸ்வெல், கைல் ஜேமீசன் மற்றும் வாணிந்து ஹசரங்கா ஆகியோருடன் நான்கு ஆபத்தான வெளிநாட்டு வீரர்களை களமிறக்கும் சந்தர்ப்பம் RCB க்கு உருவாகும். அவர் யுஸ்வேந்திர சாஹலுடன் இணைந்து சுழல் ஜாலம் புரியக்கூடும் என்றே கருதப்படுகின்றது.
ஹசரங்க துடுப்பாட்ட வல்லமையும் கொண்டுள்ளதால் RCB யின் மத்திய வரிசைக்கும் வலுசேர்க்க உதவும் என்று நம்பப்படுகின்றது.
வோஷிங்டன் சுந்தரும் RCB அணியில் இல்லாததால் நிச்சயமாக IPL போட்டிகளில் RCB அணி ஹசரங்கவை குறிவைத்து அழைப்பதோடு ஆடும் பதினொருவர் அணியிலும் வாய்ப்பு பெற அதிகமான சந்தர்ப்பங்கள் நிறைந்துள்ளமை தெளிவாகின்றது.