விராட் 100!
இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து என்பதைத் தாண்டி, சுவாசத்திற்குத் தடுமாறிக்கொண்டிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு, தன் ஆக்ரோச பாணியால் பெரியளவில் ஆக்ஸிஜன் அளித்த வீரர்!
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றும் அளவில் ஆடுகளங்களைக் கேட்டு வாங்கி, அவர்களைப் பெரிதாய் ஆதரித்து, உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியக் கொடியை உயர பறக்க வைத்தவர்.
கால்பந்தாட்ட வீரரின் உடற்தகுதி கிரிக்கெட் வீரருக்குத் தேவையில்லை என்று இயலாமைக்குச் சமாதானம் பேசிக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தில், திறமை என்பது இரண்டாம் பட்சம் உடற்தகுதியே முதன்மையான அம்சமென்று, வீரர்களை ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை சோர்வில்லாமல் பாய வைத்தவர்.
வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளே பெரிதாய்ப் பார்க்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் அணியைத் தயாரித்த, அதற்காகச் சில தோல்விகளைத் தாங்கிக்கொண்டு உழைத்த தொலைநோக்கானவர்.
மறைந்துகொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உயிர்தர iccயும் முன்னாள் வீரர்களும் டெஸ்ட் போட்டியை முடிவு தெரியும் வகையில் ஆடவேண்டுமென்று பேசிக்கொண்டிருக்க, சுயநலமாய் பதுங்கிக்கொள்ளாது அதை தன் அணியின் தராக மந்திரமாய் மாற்றிய டெஸ்ட் கிரிக்கெட்டின் காதலன்.
இப்படியான விராட் நாளை தன் 100வது டெஸ்ட் போட்டியை விளையாடுவது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான போட்டி!
உலக அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் விரும்பிகள், டெஸ்ட் போட்டிகள் இன்றும் தொடர்வதற்கு, ஒரு சிறப்பு நன்றியைச் சில வீரர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால் அதில் விராட் முக்கியமான வீரர்!
Thanks Virat !
Via _Richards
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு.