விருதை வென்ற பிறகு அக்சர் படேலுக்கு விருதை திருப்பிக் கொடுத்த குல்தீப் யாதவ் – இதற்கெல்லாம் மனசு இருக்கணும்..! (வீடியோ)

விருதை வென்ற பிறகு அக்சர் படேலுக்கு விருதை திருப்பிக் கொடுத்த குல்தீப் யாதவ் – இதற்கெல்லாம் மனசு இருக்கணும்..! (வீடியோ)

குல்தீப் யாதவ் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆட்டநாயகன் விருதை தனதாக்கினார்.

பஞ்சாப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பந்துவீச்சாளர்களில் குல்தீப் ஒருவராவார், DC ஐபிஎல் 2022 போட்டியில் நேற்று 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இலக்கைத் துரத்தி வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டிக்கு பின்னர் குல்தீப் ஆட்ட நாயகன் விருது பெற்றார், ஆனால் மணிக்கட்டு (Wrist) சுழற்பந்து வீச்சாளர் அந்த விருதை தனது அணி வீரரும் சக சுழற்பந்து வீச்சாளருமான அக்சர் படேலுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

போட்டிக்கு பிந்தைய பரிசளிப்ப வழங்கும் விழாவில் குல்தீப் கூறுகையில், “இந்த விருதை அக்சருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

“அவர் நன்றாக பந்துவீசினார் மற்றும் நடுத்தர ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அவர் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன், எனவே இதை அவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குல்தீப் தனது நான்கு ஓவர்களில் 2/24 என்ற பெறுதி , அக்சர் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

27 வயதான குல்தீப் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் தனது இடத்தை இழந்திருந்தார், ஆனால் டெல்லி கேபிடல்ஸில் தனது இடத்தை மீட்டிருக்கிறார்.

டெல்லி அணியில் தனது பங்கு என்ன என்பது குறித்து அவர் தெளிவாக இருப்பதாகவும், அவரை ஆதரித்ததற்காக கேப்டன் ரிஷப் பந்த் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

 

“இந்த சீசனில் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கிடைத்துள்ளது, மேலும் எனது பாத்திரத்தில் நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எனது பந்துவீச்சை ரசிக்கிறேன், என்னை ஆதரித்த பெருமை ரிஷப்பிற்குச் செல்கிறது. அது ஒரு பந்துவீச்சாளருக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது, அது எங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்” என்றும் குல்தீப் கூறினார்.