விரைவான சதங்கள்- பாவட் அலாம் புதிய சாதனை ..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட பாவட் அலாம் தன்னுடைய மீள்வரவை மிகச்சிறப்பாக நிரூபித்து வருகிறார் .
மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாற்றமான நிலையில் இருந்தபோது (2/3) ஆடுகளம் புகுந்து ,மிகச் சிறப்பாக 124* ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
நேற்றைய போட்டியில் 22 இன்னிங்ஸ்களில் விரைவாக 5 சதங்கள் பெற்று பாகிஸ்தானிய சாதனையை அலாம் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் விரைவாக 5 சதங்கள் பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில் யூனுஸ்கான் (28 இன்னிங்ஸ்) முதலிடத்தில் இருந்தார். நேற்று பாவட் அலாம் 24வது இன்னிங்சில் 5 ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதைவிடவும் ஆசிய வீரர்களுடன் ஒப்பிடுகின்றபோது ஆசியாவில் விரைவாக 5 சதங்கள் பெற்றுக் கொண்ட வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் புஜாரா காணப்படுகிறார்.
24 இன்னிங்ஸ்களில் புஜாரா விரைவாக 5 சதங்கள் பெற்றுக்கொண்டார். இதனையும் இப்போது அலாம் முறியடுத்துள்ளார்.