விறுவிறுப்பான கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு..!

விறுவிறுப்பான கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு..!

மேற்கிந்திய தீவுகள் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பாவட் அலாம் அற்புதமான சதமடிக்க பாகிஸ்தான் அணி 302 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சஹீன் ஷா அப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுத்தனர். இதன் காரணத்தால் 150 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 176/6 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு போட்டியை இடைநிறுத்தியது.

152 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சிலும் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கையுடன் 329 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 49 ஓட்டங்களை பெற்றுள்ளமைை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு இன்றைய இறுதி நாளில் 280 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிர்ச்சி வைத்தியங்கள் அரங்கேற்றி வரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சில வேளைகளில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என நம்பப்படுகிறது.

அதிகமாக பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் இரண்டு அணிகளுக்கும் வெற்றிக்கு சம வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக் காட்டத்தக்கது .

ஆக மொத்தத்தில் ஐந்தாம் நாள் ஆட்டம் ஆட்டம் ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியதால் ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்றே நம்பப்படுகிறது.