விளையாட்டின் மூலம் மனிதம் காண்பாய் மனிதா- ஐரோப்பாவின் ஜனாதிபதி விருது..!

விளையாட்டின் மூலம் மனிதம் காண்பாய் மனிதா- ஐரோப்பாவின் ஜனாதிபதி விருது..!

UEFA Championship இன் உயரிய விருது வழங்கும் விழா 2020 – 2021 இற்கான இடம்பெற்றது. இதில் ஒவ்வொரு வருடமும் போல சிறந்த வீரர்கள் பயிற்றுவிப்பாளர் என்று விருதுகள் வழமையாக வழங்கப்பட்டது அதை விட ஒரு புதிய ஒரு வித்தியாசமான விருதுவழங்கப்பட்டு ஒன்பது பேர் அந்த மேடையில் கௌரவிக்கபட்டார்கள்.

ஆம் அது UEFA PRESIDENT AWARD என்ற ஒன்று, அது என்ன எதற்கு அவ்வாறு இடம்பெற்றது என்ற கேள்வி இருக்கும். அது ஜூன் மாதம் இடம்பெற்ற Euro 2020 கால்பந்து தொடர் டென்மார்க் தலைநகரில் இடம்பெற்ற டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகள் மோதிய போட்டியில் இடம் பெற்ற ஒரு நிகழ்வின் வெளிக்காட்டே அந்த மாதிரி ஒரு விருதை வழங்க முன்வந்துள்ளார்.

பெரும்பாலும் உதைப்பந்து ரசிகர்கள் எல்லோருக்கும் அந்த சம்பவம் நினைவிருக்கும், அவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் மூலம் அதைப்பற்றி பலரும் அறிந்திருக்க கூடிய ஒன்றுதான். இப்போதும் மனதுக்குள் அந்த நிகழ்வு ஒரு மறா வடுவாக இருக்கும்.
போட்டி இடம்பெற்று கொண்டிருக்கும் நேரம் 42 நிமிடத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம். ஆம் டென்மார்க் முன்னணி நட்சத்திர வீரர் எரிக்ஸன் அவர்கள் எதுவுமே நடக்காத போதும் அவர் கீழே விழுந்து கிடந்தார். அனைவரும் என்ன என்று யோசிக்கும் நேரத்தில் பேச்சு மூச்சு இன்றி அசைவின்றி கிடந்த எரிக்ஸனை நோக்கி மைதானத்தில் விரைந்து வந்த மருத்துவ குழாம். அந்த மருத்துவர் சொன்னது எரிக்ஸன் க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று மொத்த ரசிகர்கள், வீரர்கள், எதிரணி வீரர்கள் என்று எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர். எரிக்சன் மனைவி சபீனா மைதானத்துக்குள் வந்து என்ன நடைபெறுகிறது என்று தெரியாது அழுதுகொண்டு இருக்க மொத்த ரசிகர்களும் என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பி இருக்க. மருத்துவர்கள் எரிக்சன் கு மைதானத்தில் வைத்தே ஆரம்ப கட்ட முதலுதவிகளை செய்து எரிக்சன் ஐ சுவாசிக்க வைக்கிறார்கள். எரிக்சன் க்கு மைதானத்தில் முதலுதவி வழங்கும் போது ஏனைய வீரர்கள் எரிக்சன் ஐ சுற்றி வட்டம் அமைத்துநின்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு ஒரு மணி நேர போராட்டத்தின் பின் கண்முழித்தார் எரிக்சன். மொத்த கால்பந்து உலகமும் பெருமூச்சு விட்டு இருக்க. மைதானத்தில் இருந்தவர்கள் இலதவர்கள் என்று சகலரும் அந்த மருத்துவ குழாமை பாராட்டிய நேரம் நடுவர் அந்த மருத்துவ குழாத்தை மைதானத்தில் அழைத்து பாராட்டி இருந்தார். அந்த சம்பவத்தின் வெளிப்பாடே இந்த விருதை அந்த மாபெரும் அரங்கில் வழங்கியது.

On-site medical team
Mogens Kreutzfeldt (chief medical officer)
Frederik Flensted (stadium medical manager)
Anders Boesen (pitchside emergency doctor)
Peder Ersgaard (paramedic)

UEFA Venue Medical Officers
Jens Kleinefeld
Valentin Velikov

Danish national medical team
Morten Skjoldager (physio accompanying the team doctor)
Morten Boesen (team doctor)
Simon Kjær (Denmark national team captain)

Denmark, Christian Ericson

இவர்களே அந்த விசேட விருதை பெற்றவர்கள். இதில் எதற்கு டென்மார்க் அணித்தலைவர் என்ற கேள்வி வரும். ஆம் அது என்ன வென்றால் அந்த தருணத்தில் அவர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையே இதற்கு காரணம் எரிக்சன் விழுந்து கிடப்பதை பார்த்த Kjær ஓடி வந்து குப்பறப்படுத்து இருந்த எரிக்சன் ஐ நேராக படுக்க வைத்து சுவாச பாதையை நாக்கு அடைபட்டு இருக்கா என்று பார்த்து உடனடியாக மருத்துவ குழாமை அழைத்த அந்த நொடி அவரது செயற்பாடு அது மட்டுமில்லாமல் எரிக்சன் மனைவி சப்பிரீன அழுது கொண்டு நிக்கும் சப்பிரீனக்கு ஆறுதல் வார்த்தை கூறியது என்றும் தனது சக வீரர்களை ஒன்றிணைத்து வட்டமைக்க வைத்து ஒரு தலைவனாக அந்த இடத்தில் செயற்பட்ட விதம் அதுவே அவரையும் இதில் இணைய வைத்தது.

UEFA தலைவர் விருது வழங்கிய போது நன்றியை தெரிவித்து இருந்தார்.

A message from Christian Eriksen

“I would like to thank Morten [Skjoldager], Morten [Boesen] and the medical team who helped in Parken on 12 June. You did a fantastic job and saved my life.

“Also a big thanks to my friend and captain Simon and my teammates in the Danish team for your support, both on 12 June and afterwards.

“Thanks to all the fans who have sent messages to me and my family. It means a lot and has given us strength and support. Thank you.”

UEFA president கூறுகையில்

which recognises outstanding achievements, professional excellence and exemplary personal qualities – as “the true heroes of EURO 2020. It is indeed a great honour for me to present them with the UEFA President’s Award.

“This year, the President’s Award transcends football,” he said. “It serves as an important and eternal reminder of just how precious life is and puts everything in our lives into the clearest perspective,” he added.

“I would also like to send my very best wishes to Christian Eriksen and his family as he continues his recovery.”

இவ்வாறு கூறி இருந்தார்கள்……

#சந்துரு வரதராசன்