விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்த வருட இறுதி விருந்துபசார வைபவம் (புகைப்படங்கள் இணைப்பு )
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இன்று இரவு வருட இறுதி விருந்துபசாரமும் ,ஒன்றுகூடலும் சுகததாச விருந்தகத்தில் இன்று (27) இரவு இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ராம் கிரிஷின் ஒருங்கிணைப்பில் ஏராளமான விளையாட்டுத் துறைசார் ஊடக நண்பர்கள் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றனர்.
இலங்கையில் விளையாட்டுத்துறை எதிர்நோக்கும் சவால்களும் ,விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்கள் தொடர்பாகவும் இந்த விருந்துபசார வைபவத்தின்போது சினேகமாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அனைத்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ,ராஜாங்க அமைச்சர் ,விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மாமனார், மற்றும் ஏராளமான இலங்கையின் தமிழ், சிங்கள ஊடக நண்பர்கள் இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
சுகத்தாச விருந்தகத்தில் இந்த ஒன்றுகூடலும் விருந்துபசார வைபவமும் மிகச்சிறந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .
அனைவருக்கும் முன்கூட்டிய புதுவருட வாழ்த்துக்கள்
புகைப்படங்கள் இணைப்பு.