விளையாட்டுத்துறை அமைச்சரின் வெளிவிவகார ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியில் ராம்..!

இலங்கை விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் LN விளையாட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.ராமகிருஷ்ணன் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் வெளிவிவகார ஒருங்கிணைப்பு அதிகாரி பதவி பெற்றுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது.

அவர் CSN மற்றும் Sirasa இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் மற்றும் லேக் ஹவுஸ் அச்சு ஊடக நிறுவனங்களிலும் விளையாட்டு ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு வெளிநாடுகளில் இயங்கிவரும் பல விளையாட்டு ஊடகவியலாளர் சங்கங்களில் செயலூக்க உறுப்பினராகவும் உள்ளார்.

2017 முதல் 2019 வரை இலங்கை விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக கடமையாற்றிய இவர், 2020 ஆம் ஆண்டு முதல் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

அவர், இரண்டாவது தடவையாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் வெளிவிவகார ஒருங்கிணைப்பு அதிகாரி பதவி மூலமாக தொடர்ந்து சமுதாயத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

எமது விளையாட்டு.com சார்பில் வாழ்த்துவதில் மகிழ்வுறுகின்றோம் .