நாடளாவிய ரீதியில் காணப்படும் விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் பலவற்றின் பராமரிப்பு சரியான வகையில் இடம்பெறாமையால் அவற்றைப் பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகள் எதிர்பார்க்கின்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாதுள்ளமை தெரியவந்துள்ளது.
விளையாட்டுத் துறையில் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக, குறிப்பாக மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்குத் தேவையான வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களைப் பேணுவது அவசியமாகும்.
அதற்கமைய தனியார் துறையினரின் பங்களிப்புடன் அவ்வாறான விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை நடாத்திச் செல்வதற்கான முறையான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
President Media -Sri Lanka