வீரர்கள் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான கல்வித் திட்டம்- FIFA தகவல்

போட்டிகளின் போது வீரர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, மற்றும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றமையை தடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுக்கவுள்ளது.

இந்த தகவலை நேற்றைய தினம் புதன்கிழமை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

FIFA அதன் 211 உறுப்பு நாடுகளில் உள்ள வீரர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் குறித்த பாடத்திட்டத்தை அமுலாக்கவுள்ளது.
FIFA தலைவர் கியானி இன்பான்டினோ ஒரு அறிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வீரர்கள் துஸ்பிரயோகம், தாக்குதல் என்பன தடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.