வெறித்தனமான போட்டியில் வென்று Euro கிண்ண காலிறுதிக்கு நுழைந்தது Spain
Euro 2020 இன் இன்றைய Round of 16 ஆட்டத்தில் Croatia மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
பலம் வாய்ந்த இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில் ஸ்பெயின் கோல் காப்பாளர் Unai Simon தனது அணி வீரர் pass செய்த பந்தை காலால் மறித்த போது தடுமாறியதால் பந்து கோல் கம்பத்துக்குள் நுழைந்தது. இவ் Own Goal மூலம் முன்னிலை பெற்ற Croatia தொடர்ந்து உற்சாகத்துடன் ஆடியது.
எனினும் சுதாகரித்துக் கொண்ட ஸ்பெயின் Croatia அணியை திக்கு முக்காட வகித்தது. இதன் விளைவாக ஸ்பெயின் Sarabia, Azpilivueta மற்றும் Ferran Torres ஆகியொரின் 3 கோல்களின் உதவியுடன் 3-1 என முன்னிலை பெற்றது.
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஸ்பெயின் அணிக்கு இறுதி 10 நிமிடங்களில் அதிர்ச்சியளித்தது Croatia. 84 ஆவது நிமிடத்தில் Oršić உம் 90 ஆவது நிமிடத்தில் Pasalic உம் கோல் அடிக்க போட்டியை 3-3 என சமநிலையாக்கி ஆட்டத்தை 30 மேலதிக நேரத்துக்கு எடுத்து சென்றது Croatia.
மேலதிக நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய Croatia அணிக்கு கோல் போடும் வாய்ப்புள்ள மயிரிழையில் நல்வின. ஸ்பெயின் அணியும் சற்றும் சளைக்காமல் தனது வாய்ப்புக்களை உருவாக்கியது. Spain இன் முயற்சிக்கு பலனாக Morata இன் சிறப்பான கோல் உதவியுடன் Spain மீண்டும் முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து Croatia மீள்வதற்குள் ஸ்பெயின் சார்பில் Oyarzabal கோல் அடித்து 5-3 என Spain அணியை 2 கோல் களால் முன்னிலைப் படுத்தினார்.
இறுதியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 8 கோல்கள் அடித்த வெறித்தனமான இப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்.
இப் போட்டியின் முதலாவது கோல் Own Goal ஆக அமைந்தது. இது Euro 2020 இன் 9 ஆவது Own Goal ஆகும்.
Euro வரலாற்றில் ஸ்பெயின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் 5 கோல்கள் போட்டுள்ளது.
இப் போட்டியில் 8 கோல்கள் பெறப்பட்டு Euro கிண்ண போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிக கோல்கள் என்ற சாதனை பட்டியலில் இப் போட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.