வெறி பிடித்த டிக்வெல்ல, 8 நேரம் தீவிர பயிற்சி, அமெரிக்கா பறக்கும் முனைப்பில் குணதிலக்க ,மென்டிஸ்…!

இங்கிலாந்தில் உயிர் குமிழி முறையை மீறிய குற்றத்திற்காக ஒழுங்கு நடவடிக்கைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் ஒரு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்த தீவிர பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 8 மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருவதுடன் தடைக்கு பிறகு விரைவில் அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரோஷன் டிக்வெல்ல ஒழுங்கு விசாரணை குழு முன்பாக அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாகவும், அங்கே நடந்தது என்ன என்பது குறித்து தனது கருத்துக்களை தெளிவாக தெரிவித்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

பந்தை சேதப்படுத்தி ஓராண்டு தடைக்குப் பின்னர் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2019 இல் வெறிகொண்ட சிங்கமாக மீண்ட வந்த்தைப்போன்று  நிரோஷன் டிக்வெல்லாவும் கிரிக்கெட்டுக்குத் திரும்பத் தயாராகி வருகிறார்.

ஆனால் தடைக்கு உள்ளான மற்றைய இரண்டு வீரர்களான தனுஷ் குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்க தேசிய அணியில் இணைந்து விளையாடுவதற்கான ஆயத்தங்களையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் விசாரணைகளில் உண்மை பேசி ,நடந்தவற்றை ஒப்புக்கொண்டு, தவறுக்காக தண்டனை அனுபவித்து வரும் டிக்வெல்ல இவற்றிலிருந்து விரைவாக ஒரு புதுவித வீர்ராக வந்து சேரட்டும் என்று காத்திருப்போம்.