வெறும் 1 vote வித்தியாசத்தில் மிகப்பெரிய கவுரவத்தை பெற்ற மிட்சல் ஸ்டார்க் – என்ன தெரியுமா?

வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் மிகப்பெரிய கவுரவத்தை பெற்ற மிட்சல் ஸ்டார்க் – என்ன தெரியுமா?

தங்கள் நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருது வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி 2021 முதல் ஜனவரி 26 2022 வரையிலான காலகட்டங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக சிறந்து விளங்கியவர்களை ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். மறுபுறம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்ற 2021 டி20 உலகக்கோப்பை பைனலில் அபாரமாக பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது வென்று இந்த விருதுக்காக கடும் போட்டி போட்டார். இந்த முக்கிய விருதை வெல்ல முடியாமல் போனாலும் “2021ஆம் ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலிய டி20 வீரர்” என்ற விருதை மிட்செல் மார்ஷ் வென்றார்.

விருது பட்டியல்:
இது மட்டுமல்லாமல் கடந்த “2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வீரர்” என்ற விருதையும் மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். அதைப்போல ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டில் வழங்கப்படும் உயரிய விருதான பெலிண்டா கிளார்க் விருதை அந்த அணி வீராங்கனை “ஆஸ்ட்லே கார்ட்னர்” வென்றார்.

மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் என்ற விருதை அந்த அணியின் டிராவிஸ் ஹெட் வென்றார். 2021ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக மிட்செல் ஸ்டார்க் மனைவி அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இந்த விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

“கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகள் 2021” – மொத்த விருது பட்டியல் இதோ:
ஆலன் பார்டர் மெடல் : மிட்செல் ஸ்டார்க்
பெலின்டா கிளார்க் : ஆஷ்லே கார்ட்னர்
2021 சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிஸ் ஹெட்
2021 சிறந்த ஒருநாள் வீரர் : மிட்சேல் ஸ்டார்க்
2021 சிறந்த டி20 வீரர் : மிட்சேல் மார்ஷ்
2021 சிறந்த ஒருநாள் வீராங்கனை : அலிசா ஹீலி
2021 சிறந்த டி20 வீராங்கனை : பெத் மூனி
2021 சிறந்த உள்ளூர் வீரர் : டிராவிஸ் ஹெட்
2021 சிறந்த உள்ளூர் வீராங்கனை : எலிஸ் வில்லானி
பேட்டி வில்சன் 2021 சிறந்த இளம் வீரர் : டார்சி ப்ரவுன்
டான் ப்ராட்மேன் 2021 சிறந்த இளம் வீரர் : டிம் வார்ட்
மக்கள் தொடர்பு விருது : ஜோ கூக்
ஹால் ஆப் இண்டக்டீஸ் : ஜஸ்டின் லாங்கேர் & ராலி தாம்சன்