வெற்றியை நெருங்கும் தென் ஆபிரிக்கா – விக்கட் வீழ்த்த தவறிய பாகிஸ்தான் …!

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்றுவரும 2வது டெஸ்ட் போட்டியில் 2ம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 298 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் 370 எனும் வெற்றி இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வருகின்றபோது தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 127 ஓட்டங்களை பெற்று உள்ளது .

நாளை போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடரவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு இன்னும் 9 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க 243 ஓட்டங்கள் தேவையாக இருக்கிறது .

நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டி தொ்டுவதற்கான வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவிற்கு காணப்படுகிறது.

எது எவ்வாறாயினும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான், இந்தப் போட்டியில் இவ்வாறு ஐந்தாம் நாளை நிறைவுக்கு கொண்டு வரப்போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

காத்திருப்போம் ராவல்பிண்டி போட்டியும் விறுவிறுப்பான முடிவை அறிவதற்கு ?????