வெற்றியோடு தொடரை ஆரம்பித்தது இந்தியா- ஹசரங்க ,அசலங்க இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்தனர்..!

வெற்றியோடு தொடரை ஆரம்பித்தது இந்தியா- ஹசரங்க ,அசலங்க இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்தனர்..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் ஷானக முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை மேற்கொண்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பெருமளவில் ஓட்டக் குவிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் வாய்ப்பு வழங்கவில்லை என்பதே மிக குறிப்பிடக்கூடிய முக்கிய விஷயமாகும்.

இலங்கை பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீர, ஹசரங்க, சாமிக கருணாரத்ன ஆகியோர் மிகவும் அருமையான பந்துவீச்சை இன்று ஏற்படுத்தினர்.

சூரியகுமார் யாதவ் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார், ஷிகார் தவான் 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார் .

 இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

165 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி வரைக்கும் நெருக்கடியை கொடுத்தது. அசலங்க களத்தில் இருந்த வரைக்கும் இந்திய வீரர்களுக்கு தோல்வி பயத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். ஆயினும் திபாக் சஹார் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை வீரர்கள் விரைவாக நடையை கட்டினர்.

இறுதியில் இந்திய அணி இந்த போட்டியில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்,சஹார் ,சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர், தமிழகத்தினுடைய வீரர் சக்கரவர்த்திக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. பாண்டியா சகோதர்ர்களும் ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்தது.