வெற்றி கரமாக நடந்தேறிய அனைத்து பல்கலைகழக மென்பந்து கிரிக்கெட் தொடர்

வெற்றி கரமாக நடந்தேறிய அனைத்து பல்கலைகழக மென்பந்து கிரிக்கெட் தொடர்

யாழ் மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் உள்ளடக்கியதாக யாழ் மாவட்ட மாணவர் ஒன்றியம் நடத்திய மென்பந்து சுற்றுப் போட்டி கடந்த 10 ஆம் 11 ஆம் திகதிகளில் யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. பலவருட கால முயற்சியின் பலனாக இவ்வருடம் நடைபெற்று முடிந்த குறித்த போட்டியில் ஏழு வெவ்வேறு பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பது அணிகள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை மொறட்டுவை பல்கலைக்கழக அணிகளும் மூன்றாம் இடத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியும் கைப்பற்றின. சிறந்த துடுப்பாட்ட வீரராக அ. சங்கீதனும் சிறந்த பந்துவீச்சாளராக கு. சாருயனும் தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடர் நாயகன் விருதை சி. திருக்குமரனும் பெற்றுக்கொண்டார். மேற்படி போட்டியானது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.