வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் பட்டியல்- இந்தியர்கள் முன்னணியில்..!

வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் – இந்தியர்கள் முன்னணியில்..!

இந்திய அணியின் அண்மைய வெற்றிகளுக்கு அவர்களது சிறந்த பந்துவீச்சு படையணியே காரணமாக திகழ்கிறது.

2018 ம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கட்டுக்கள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் 3 இடங்களில் காணப்படுகின்றனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் காணப்படும் பூம்ரா, 19 டெஸ்ட்டில் 91 விக்கெட்களை வெளிநாட்டு மண்ணில் 2018 க்கு பின்னர் கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் காணப்படும் இந்தியாவின் மொகமட் ஷமி , 19 டெஸ்ட்டில் 61 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

3 வது இடத்தில் காணப்படும் இந்தியாவின் இசாந்த் சர்மா , 14 டெஸ்ட்டில் 58 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த பட்டியிலில் இலங்கையின் லக்மால் 4 வது இடத்திலும் (55 விக்கட்டுக்கள்) , அவுஸ்ரேலியாவின் பெட் கம்மின்ஸ் 5 வது இடத்திலும் (51 விக்கட்டுக்கள்) காணப்படுகின்றனர்.

ஆகமொத்தத்தில் சொந்த மண் கடந்து வெளிநாடுகளிலும் இந்திய பந்துவீச்சு படை ஆதிக்கம் செலுத்துகின்றமையே அவர்களது வெளிநாட்டு வெற்றிகளின் காரணமாக அமைந்துள்ளது.