வெளிநாடு பறக்கவுள்ள குசல் பெரேரா – பழைய அதிரடியை எதிர்பார்த்து காத்திருக்கலாம்…!
இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீர்ரான குசல் பெரேரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அறுவை சிகிச்சை செய்ய தயாராகி வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா சில வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 2018 ஆம் ஆண்டு தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
எனினும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாத நிலையில் குசல் விளையாட்டின்போது பல தடவைகள் அவதியுறு நிலைக்கு ஆளாகினார்.
இதனால் குசல் பெரேராவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு அவரது பிசியோதெரபிஸ்ட் முன்னர் பரிந்துரைத்திருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கை அணியில் இருந்து நீண்ட காலம் விலகி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் என்ற காரணத்தால் குசல் பெரேரா அந்த முடிவை நிராகரித்திருந்தார்.
அகதி எவ்வாறாயினும் சிகிச்சை நோக்கில் இன்னும் சில தினங்களில் குசல் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குசல் மீண்டுவந்து பழைய அதிரடியைத் தொடர பிரார்த்திப்போம் ?